Mens Fellowship

ஆண்கள் ஐக்கிய சங்கம்:

     1973 ம் ஆம் ஆண்டில் திருநெல்வேலி திருமண்டலத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கத்திற்கு என்று புதியதோர் ஐக்கிய சங்கத்தை உருவாக்கி அதற்க்கு நமது ஆலயத்தைச் சேர்ந்த திரு. பெனடிக்ட் அவர்களை திருமண்டல செயலாளராக நியமித்து திருமண்டலத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் ஆண்கள் ஐக்கிய சங்கம் உருவாக்கப்பட்டது.

நமது ஆலயத்திலும் ஆண்கள் ஐக்கிய சங்கம் உருவாக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை ஆண்கள் ஐக்கிய சங்க கூட்டமும், மாதத்திற்கு ஒரு முறை கிராமங்களுக்கு சென்று சுவிசேஷ ஊழியமும் நடத்தப்படுகிறது. மேலும் செவ்வாய் கிழமை தோறும் கடற்கரை ஜெபமும், வியாழக் கிழமை தோறும் மிஷினரி தாங்குவோராக்காக ஜெபமும் நடைபெறுகிறது. இதுவரை சுமார் 31 மிஷினரிகள் நமது ஆலயத்திலிருந்து ஆண்கள் ஐக்கிய சங்கம் மூலம் அனுப்பப்பட்டு அவர்களுக்காக ஜெபித்தும் கொடுத்தும் வருகின்றனர். நமது ஆண்கள் ஐக்கிய சங்கம் மூலம் 6 ஆலயங்கள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது.